இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமமானது சுரங்கம், உலோக உற்பத்தி, எண்ணெய், எரிவாயு, இரும்பு, ஸ்டீல், மின்சாரம் என பல துறையில் வர்த்தகம் செய்து வருகிறது. தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல இடங்களில் வர்த்தகம் செய்து வருகிறது. ஏற்கனவே, வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு, 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமுடியாது.  இந்தநிலையில்தான், சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டம், சிங்கி தராய் பகுதியில் உள்ள வேதாந்தா அனல் மின்நிலையத்தில், ஏற்பட்ட பெரும் விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்த வழக்கில்,  வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான அனில் அகர்வால், சக்தி ஆலைத் தலைவர் தேவேந்திர படேல் உள்ளிட்டோர் மீது சத்தீஸ்கர் காவல்துறை FIR பதிவு செய்துள்ளது.  ஏப்ரல் 14 ஆம் தேதி  நடந்த உயிரிழப்புகளுக்கு கொதிகலனிலிருந்து உயர் அழுத்த நீராவி எடுத்துச் செல்லும் இரும்பு குழாய் ஒன்று வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்பம், தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகினர் என்றும் தெரியவந்துள்ளது.  கொதிகலன் உலைக்குள் அளவுக்கு அதிகமான எரிபொருள் குவிந்ததன் காரணமாக அழுத்தம் அதிகரித்து, அதுவே வெடிவிபத்தைத் தூண்டியதாக முதற்கட்டத் தொழில்நுட்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சக்தி மாவட்டத்தில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. வெடிப்பு நிகழ்ந்த நாளன்று பிற்பகல் 2.33 மணியளவில், ஒன்று முதல் இரண்டு வினாடிகளுக்குள் உலையின் அழுத்தம் திடீரென உயர்ந்ததால், உலையை நிறுத்தவோ அல்லது சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​மிகக் குறைந்த நேரமே இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​வேதாந்தா நிறுவனமும் அதன் ஒப்பந்ததாரரான NGSL (NTPC GE Power Services Limited), எந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பராமரிப்பது மற்றும் இயக்குவது தொடர்பான தரநிலைகளை முறையாகக் கடைப்பிடிக்கத் தவறியது தெரியவந்தது. பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளும், அலட்சியமான செயல்பாடுகளுமே கொதிகலன் அழுத்தத்தில் திடீர் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி, இறுதியில் இந்த விபத்திற்கு வழிவகுத்தன. தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், முதற்கட்டமாக அலட்சியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாகவே FIR பதிவு செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறது. அதன்படி,  BNS பிரிவுகள் 106 (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்), 289 (எந்திரங்கள் தொடர்பான அலட்சியச் செயல்) மற்றும் 3(5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ், தப்ரா காவல் நிலையத்தில் இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என சக்தி காவல் கண்காணிப்பாளர் பிரஃபுல் தாக்கூர் கூறியுள்ளார்.  சக்தி காவல் கண்காணிப்பாளர் பிரபுல் தாக்கூர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் படேல் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் சுமித் குப்தா, தடயவியல் அதிகாரி சிருஷ்டி சிங் மற்றும் டாப்ரா காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் படேல் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  மாவட்ட ஆட்சியர் அம்ரித் விகாஸ் டோப்னோ ஒரு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளார். இந்த வெடிப்புச் சம்பவம் கடுமையான அரசியல் எதிர்வினையைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள், அந்நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் நடந்த மிக மோசமான தொழில்துறை விபத்துகளில் ஒன்றான இதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ]]>

Bills & Payments · SPONSORED

Pay Any Bill Instantly

Electricity, water, gas and more — one app, zero hassle.

Visit AllBills.in