அழகாய் இருந்ததால் இப்படியா? வீட்டில் சடலங்கள்..! விசாரணையில் திகில்..! அழுது கதறிய கைக்குழந்தை.... கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை பகுதியைச் சேர்ந்தவர் காவியா. இவருக்கும், இவரது தனது தாய்மாமாவான திருப்பத்தூர் மாவட்டம் திம்மணமுத்தூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், இருவரும் தொட்டமெட்டரைப் பகுதியில் காவியாவின் தாய் சாவித்திரி வீட்டின் அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். சுரேஷ் ஓசூர் அருகே உள்ள சானசந்திரம் என்ற பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கும், அதேபோல் காவ்யா கெலமங்கலம் அருகே உள்ள டாடா தொழிற்சாலைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று வயதில் வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தாலும் தாய் சாவித்திரியின் வீட்டில் தான் இருவரும் தினமும் சாப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், 15 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு மேல் ஆகியும் சுரேஷ், காவ்யா இருவரும் சாப்பிட சாவித்திரியின் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் சாவித்திரி, அருகில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே காவ்யாவின் மூன்று வயது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் உள்பக்கமாக தாழ்ப்பாழ் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே பதறிப்போன சாவித்திரி, அக்கம் பக்கத்தினரை கூப்பிட, அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது காவ்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அதன் அருகே காவ்யாவின் கணவர் சுரேஷ் கயிறால் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அழுது கொண்டிருந்த குழந்தையை , சாவித்திரி மீட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவ்யா, திருமணத்திற்கு முன்பே பலரோடு நட்பாக பழகி வந்துள்ளார். இதனை தொடர்ந்து, காவ்யா திருமணத்திற்கு பின்பு வேலைக்கு சென்ற இடத்திலும், அனைவரிடமும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. நட்பாக பழகுவதை அவரது கணவர் சுரேஷ் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. காவ்யா யாரிடமாவது போனில் பேசினால் கூட அதை சுரேஷ் சந்தேகத்தோடு பார்த்து தினமும் வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதே போல தமிழ் வருடப் பிறப்பு அன்று இரவும், சுரேஷின் சந்தேகத்தால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இருவரும் சண்டையிடுவது வாடிக்கை என்பதால் அக்கம் பக்கத்தினரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் சுரேஷ், அருகில் இருந்த கம்பியை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார். இதில் காவ்யா மயங்கி விழுந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராத சுரேஷ், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் காவ்யாவின் கழுத்தை அறுத்ததாக சொல்லப்படுகிறது. இதில் காவ்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் சுரேஷ் வீட்டின் கதவை பூட்டியுள்ளார். மனைவி இறந்ததால், போலீசார் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என பயந்து போன சுரேஷ், மனைவியின் சடலம் அருகேயே கயிறை கட்டி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மனைவி அழகாக இருந்ததால் வேறு யாருடனும் தவறான உறவில் இருப்பாள் என கணவர் சந்தேக கண்ணோட்டத்தில் இருந்ததால், கணவன் மனைவி இருவரும் சடலமான சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதுவும் அறியாத மூன்று வயது குழந்தை, தாய், தந்தையை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ]]>
அரசியல்
சாரயேவோ
சாரயேவோ பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.இந்த மாநகரம் 305,242 மக்கள் வாழும் நான்கு நகராட்சிகளையும் 423,645மக்கள்தொகை கொண்ட சாரயேவோ கன்டன் எனப்படும் பல்லின நகரையும் உள்ளடக்கியுள்ளது.(as of ஆகத்து 2009). இது சாரயேவோ கன்டனின் மையமாகவும் பொசுனியா
5d ago· 16 min read


